Department of Tamil



Warning: include(../notification.php): Failed to open stream: No such file or directory in /www/wwwroot/adjadmc.com/departments/sidebar-dept.php on line 25

Warning: include(): Failed opening '../notification.php' for inclusion (include_path='.:') in /www/wwwroot/adjadmc.com/departments/sidebar-dept.php on line 25

  தமிழ்த்துறைபற்றி (History of the Department)

                வங்கக்கடல் தாலாட்டும் நன் நாகையில் பாரம்பரிய மிக்க கல்லூரி அ.துரைசாமி நாடார் மரகதவள்ளி அம்மாள் மகளிர் கல்லூரி,சர்வதேச பெண்கள் ஆண்டான  1975 இல்  இக்கல்லூரி துவங்கப்பட்டது. பெண்களின் முன்னேற்றத்தினை நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றது. இக்கல்லூரியில் சிறப்பு மிக்க பெருமைமிகு துறைகளில் தமிழ்த்துறையும் ஒன்று. தமிழ்த்துறை 1975 ஆம் ஆண்டு இளங்கலை பகுதி 1 தமிழ் பயிற்றுத் துறையாக தோற்றம் பெற்றது. இத்துறையில் பணிபுரிகின்ற பேராசிரியர்கள் அனைவரும் தகுதியும் திறமையும் உடையவர்கள்.
         2013ம் ஆண்டில் இளங்கலை தமிழ் இலக்கியம்(B.A Tamil) துவங்கப்பட்டு வளர்ச்சி பெற்று வருகின்றது. துறையில் 11 பேராசிரியர்கள் பணி புரிகிறார்கள் .இவர்களில் 4 பேர் அரசு உதவி பெறும் பேராசிரியர்களாகவும் 7 பேர் சுயநிதி பிரிவில் பணிபுரிபவர்களாகவும் திகழ்கிறார்கள் . தமிழ்த்துறையில் பணிபுரியும் அனைவருமே முனைவர் பட்டம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
        2009 ஆம் ஆண்டு 30/05/2009 & 31/05/2009  ஆகிய இருநாட்களும் 7 வது வரலாற்றுத்தமிழ் மாநாட்டை முனைவர் தெ.வாசுகி ,இணைப்பேராசிரியர் மாநாட்டு ஒருங்கிணைப்பாளராக இருந்து சிறப்பாக நடத்தி உலகளாவிய அளவில் கல்லூரிக்கு பெருமைச் சேர்த்தார். இதுவரையில் பகுதி நேரப் பிரிவில் 8 பேருக்கு முனைவர் பட்டமும் (Ph.D) 22 பேருக்கு( எம்ஃபில்) ஆய்வியல் நிறைஞர் பட்டமும் தமிழ்த்துறை வழங்கியுள்ளது.      தமிழ்த்துறைத் தலைவராக பணியாற்றிய முனைவர் குலாமணி சுப்பிரமணியன்  . 1996 முதல் 1998 வரை பொறுப்பு முதல்வராக பணியாற்றினார் முனைவர் கஸ்தூரி ஜான்சன் இணைப்பேராசிரியர் அவர்கள் நாகை மாவட்ட நாட்டுப்புறப்பாடல்கள் ஒர்  ஆய்வு என்ற தலைப்பில் குறும் திட்ட ஆய்வு (Minar Research project) ஒன்று செய்துள்ளார். மேலும் அவர் கல்லூரியில் தேர்வு நெறியாளராக 2004 முதல் 2009 வரை பணியாற்றியுள்ளார். உள் மற்றும் வெளி கல்லூரிகளில் நடைபெறுகின்ற மாவட்ட, மாநில, தேசிய, பன்னாட்டு அளவிலான பல்வகை போட்டிகளில் மாணவிகள் கலந்துகொண்டு ரொக்கப்பணம்,விருதுகள்,சான்றிதழ் ஆகியவை பெற்று வருகிறார்கள்
      தமிழாற்றுப்படை என்ற அமைப்பின் வாயிலாக பேராசிரியர்களின் ஆய்வு மனப்பான்மையை, வாசிப்புத்திறனை மேம்படுத்தும் வகையில் பல்வேறு தலைப்புகளில் கட்டுரை எழுதியும் சொற்பொழிவு ஆற்றியும் வருகிறார்கள்.வகுப்பறை இலக்கியச்சோலை என்ற அமைப்பின் வாயிலாக தமிழிலக்கிய மாணவிகளின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் ஆண்டுதோறும் பல்வேறு நிகழ்வுகள் (பேச்சு, கவிதை, பாட்டு,  துணுக்குகள்) தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தீநுண்மி என்ற கொரானா காலகட்டத்தில் பன்னாட்டு கருத்தரங்கம், ,தேசிய கருத்தரங்கம், புத்தொளிர்பயிற்சி,வினாடி- வினா நிகழ்வு( சங்கஇலக்கியம் ஆகியவற்றை தமிழ்த்துறை இணையவழியில் நடத்தியுள்ளது .தமிழ்த்துறையில் பணியாற்றுவோர் பல்வேறு தன்னாட்சிக் கல்லூரிகளில் பாடத்திட்டக் குழு உறுப்பினர்களாக வினாத்தாள் தயாரிப்பு குழு உறுப்பினர்களாக விடைத்தாள் மதிப்பீட்டு குழு உறுப்பினர்களாக புத்தாக்கப்பயிற்சி புத்தொளிர்பயிற்சி பெற்றவர்களாக திகழ்கிறார்கள் அத்துடன் ஊடகங்களில் தமது திறமையையும் புலமையையும் வெளிக்கொணரும் வகையில் வானொலி(காரைக்கால் பண்பலை )தொலைக்காட்சி (புதுச்சேரி தொலைக்காட்சி நிலையம் ஆகியவற்றில் உரையாற்றியுள்ளார். ஊடகத்துறையில் மாணவிகளையும் பங்குபெற செய்து ஊக்குவித்து வருகிறார்கள். தமிழ்த்துறையில் பேராசியர்கள் 205 க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதி தேசிய அளவில் பன்னாட்டளவில் நடைபெறுகின்ற கருத்தரங்கங்களில் கலந்துகொண்டு வாசித்து அளித்துள்ளார்கள் .இக்கட்டுரைகள் ஆய்வுக்கோவைகளிலும் நூல்களிலும் இடம்பெற்றிருப்பது சிறப்புக்குரியதாகும். மேலும் துறையில் பணிபுரிகின்ற பேராசிரியர்கள் 13 நூல்கள் வெளியிட்டுள்ளார்கள்.
         தேசிய உணர்வையும் மொழி உணர்வையும் இலக்கிய இலக்கண நயத்தையும் கற்பிக்கின்ற பாரம்பரியமிக்க தமிழ்த்துறை பேராசிரியர்கள் இலக்கண இலக்கிய புலமையுடன் மாணவிகளின் அறிவுத்திறனை, ,ஆளுமைத்திறனை, தலைமைப்பண்பை ,நன்னடத்தையை வளர்ப்பவர்களாக திகழ்கிறார்கள்  .துறையின் வளர்ச்சிக்கு கல்லூரி தலைவர், செயலர் ,முதல்வர், துறைத்தலைவர்கள் ஆகியோர்களின்  வழிகாட்டுதலோடு தமிழ்த்துறை சிறப்பாக வளர்ந்து வருகின்றது.
துறைத்தலைவர்கள்
முனைவர்  குலாமணி சுப்பிரமணியன்-1975-2003
முனைவர் கஸ்தூரி ஜான்சன்       -2003-2009
முனைவர் அ.தனலட்சுமி  -  2009-2016
முனைவர் தெ.வாசுகி -  2016 –இன்றுவரை

 

Unique Features


 மாணவிகளின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் அவர்களின் சொந்த படைப்புகளை கையெழுத்துப் பிரதியாக தமிழோசை இதழை ஆண்டுதோறும் தமிழ்த்துறை வெளியிட்டு வருகின்றது



நோக்கம் (MISSION

 

  • மொழித்திறன் மற்றும் நாட்டுப்பற்றை வளர்த்தல்.
  • மனித மாண்பினை பயிற்றுவித்தல்..
  • ஆளுமை மற்றும் தலைமைப் பண்புகளை பெற அறிவுறுத்தல்..
  • படைப்பாற்றல் திறனை மேம்படுத்தல் ..
  • போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ள வழிகாட்டல்..


 தொலைநோக்கு (VISION)

 

  • தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு மற்றும் விழுமியங்களை உணர்த்தல்..
  • வாழ்வியல் ஒழுக்க நெறிகளை விளங்க வைத்தல். 
  • மொழியைப் பிழையின்றிப் பேசவும் எழுதவும் செய்தல்..
  • கணினித்தமிழ் இணையத்தமிழ் வாயிலாக தொழில்நுட்பத் திறனை வளர்த்தல்.

பாடத்திட்ட நோக்கம் (Course Objectives)


  • கவிதை  எழுதும்   ஆர்வத்தைத்  தூண்டி கவிஞர்களாகஉருவாக  வழிவகை   செய்தல் .
  • பல்துறை  அறிவை  மேம்படுத்த  வழி காட்டல் .
  • உரைநடை  கற்பிப்பதன்  வாயிலாக  கட்டுரைகள்  எழுதச்  செய்தல் .
  • எழுத்தாளர்களாக   உருவாக   பயிற்சி    தருதல் .
  • சமூகவாழ்வியல்   நடைமுறைகளோடு   தன்னை   ஈடுபடுத்தி   அதற்கேற்பவாழச்செய்தல் .